இராப்போஜனம் COMMUNION ஞாயிறு மாலை, ஜூலை 7, 1963 பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 63-0707 E 1. சகோதரன் ஆர்மன், உங்களுக்கு நன்றி. இன்றிரவு நம்முடைய சகோதரனுடைய உதடுகளிலிருந்து புறப்பட்ட இந்த அற்புதமான செய்தியை கேட்கும்படியாக இங்கே இருந்ததற்காக நாம் சந்தோஷமாயிருக்கிறோம், ஏற்கனவே கூறினபடி, உற்சாகப்படுத்தும்படியான இந்த மகத்தான செய்தியை நம்மிடம் கொண்டு வருவதற்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருந்திருக்க வேண்டுமென்று நாம் நம்புகிறோம். நாம் இன்றைய நாளில் தேவனுக்கு முன்பாகவும் ஒருவர் மற்றவருக்கு முன்பாகவும் எவ்வளவு பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும்! இந்த மகத்தான தேவனுடைய அழைப்பைக் குறித்து நாம் உரிமை பாராட்டுகிற நேரத்தில், நாம்-நாம்-நாம் நம் எல்லாருடைய மத்தியிலும் எந்த அசுத்தமான தொடர்புகளும் இருப்பதாக நம்மிடையே கேள்விப்படவே இல்லாதபடி பரிசுத்தமாக இருக்கவே விரும்புகிறோம். தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற இந்தக் காரியத்தைக் குறித்து நாம் தகுதியானவர்களாய் நடக்க வேண்டும். நாம் இப்பொழுது பிரயாணத்தின் முடிவை நோக்கிய பாதையில் இருக்கிறோம், அங்கே நாம் செய்வதற்கும் நினைப்பதற்கும் எல்லாவற்றிற்கும் மிகவும் அதிகமாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் எப்போதும் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டுமென்று விரும்புகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுடைய ஜீவியத்தைக் கவனித்துப் பாருங்கள்: உங்களுடைய ஜீவியமானது தேவனுடைய பரிசுத்தத்தோடு சரியாயில்லையென்றால், திரும்பிச் சென்று மீண்டும் ஜெபிக்கத் தொடங்குங்கள்; அங்கே ஏதோவொன்று தவறாயுள்ளது. புரிகிறதா? ஆவியின் கனிகள் தாமே உங்களினூடாக அறியச் செய்யும் விதமான ஒரு நிலையில் நாம் ஜீவித்தாக வேண்டும். அந்தவிதமாகத்தான் நாம் ஜீவிக்க விரும்புகிறோம். உங்களுக்குத் தெரியும், திறமையோடு பிரசங்கம் பண்ணக்கூடிய மகத்தான பிரசங்கிமார்களைக் குறித்து நாம் சிலசமயம் கேள்விப்படுகிறோம், ஆனால் நாம் ஒருவர் பிரசங்கம் பண்ணுவதைக் கேட்பதைக் காட்டிலும், பிரசங்கத்தின்படி ஜீவிப்பதை காண்பதையே நாம் அதிகமாய் விரும்புகிறோம் (பாருங்கள்?) ஏனெனில் தேவன் உள்ளே இருக்கிறார் என்பதற்கு அதுதான் அத்தாட்சியாகும். 2. இப்பொழுது, நாம் இராப்போஜன பந்திக்கு வந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது, இன்னும்கூட இராப்போஜன் எடுக்காத யாராவது ஒருவர் இங்கிருப்பார்களானால், நீங்கள் அதை ஒருக்கால் அதை உங்களுடைய சொந்த சபைகளில் எடுக்கலாம், ஆனால் இன்றிரவு உங்களால் இராப்போஜனம் எடுக்கக் முடிந்து, இந்தக் காரியங்களைச் சுற்றிலும் எங்களோடு ஐக்கியங்கொள்ள விரும்பினால், நாங்கள் மகிழ்ச்சியாயிருப்போம். நீங்கள் - நீங்கள் சுவிசேஷத்தைக் கேட்டு, அதன் ஒரு பாகமாயிருக்கிறீர்கள் என்று அறிக்கை பண்ணுகிற அந்த சுவிசேஷத்திற்கு தகுதியானவர்களாய் நீங்கள் நடக்கிற காலம் வரை நாங்கள் உங்களுக்கு ஒருபோதும் எந்த கோட்டையும் வரைய மாட்டோம். நீங்கள் இந்த சுவிசேஷத்தின் பாகமாக இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். நாம் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோமோ அதனுடைய எழுதப்பட்ட நிருபமாய் நீங்கள் - நீங்கள் இருக்கிறீர்கள். நாம் நிந்தைக்குரிய ஏதோவொன்றை செய்கிற காலம் வரை நாம் அதற்கு செவிகொடுக்க கடமைப்பட்டவர்களாயிருக்கிறோம். புரிகிறதா? நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதன்படி ஜீவித்தாக வேண்டும். நாம் செய்கிற எல்லா காரியங்களிலும், நாம் பேசுகிற எல்லா காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர, அது ஒருபோதும் தூஷிக்கப்படாத விதமாக அப்படிப்பட்ட ஒரு ஜீவியம் செய்யுங்கள். அது அந்தவிதமாகத்தான் இருக்கிறது. நாம் இதற்காக அவரை நேசிக்கிறோம். 3. இப்பொழுது, இன்றிரவு நாம் 2 கொரிந்தியர் 11ம் அதிகாரத்தில் காணப்படும் கர்த்தருடைய போஜனபந்தியின் ஒழுங்கை வாசிக்கப் போகிறோம். நாம் இதை வாசிப்போம், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும்... நாம் இதை எவ்வாறு செய்கிறோம், புதிதாக வந்திருப்பவர்கள் நம் மத்தியில் இருப்பார்களானால், ஜனங்கள் ஒருவர்பின் ஒருவராக உள்ளே வரும் வேளையில், நாம் அவர்களைப் பீடத்தைச் சுற்றிலும் அழைக்கிறோம், அப்போது அவர்கள் இராப்போஜனம் எடுக்கிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அதற்குத் தகுதியானவனாயிருக்கிறான். இப்பொழுது, நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு ஜீவியத்தை நீங்கள் ஜீவிப்பீர்களானால்... நீங்கள் உங்களுடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்க விரும்புகிறீர்கள். நல்லது, நான் நிச்சயமாக இதைச் சுருக்கமாகக் குறிப்பிடுவேனாக, நாம் அபாத்திரமாய் இராப்போஜனம் எடுப்போமானால், என்ன சம்பவிக்கும் என்பதைக் குறித்து நாம் இங்கே வேதவாக்கியத்தில் வாசிக்கிறோம். இப்பொழுது, நம்மில்நாமே நாம் பாத்திரமானவர்கள் அல்ல என்பது நமக்குத் தெரியும்; நம்மில் யாருமே பாத்திரமானவர்கள் அல்ல. ஆனால் நாம் நம்முடைய சொந்த தகுதியில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை, நாம் அவரையே நம்பியிருக்கிறோம்... நாம் - நாம் அவருடைய தகுதியில்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், நாம் நம்முடைய சொந்த எண்ணங்களுக்கு மரித்து, அவருடைய சிந்தனைகளையே நாம் சிந்தித்து, நாம் செய்ய வேண்டுமென்று அவர் நம்மிடம் கட்டளையிட்டிருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கும் யாவற்றிற்கும் தக்கதாக ஜீவித்து, திரும்பிப் பார்த்து நாம் எவ்வாறு ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்த்து, நம்முடைய ஜீவியத்தைக் கவனிக்கிறோம். நாம் சுவிசேஷத்திற்குத் தகுதியில்லாத காரியங்களை செய்கிறவர்களாக இருந்தால், நாம் இராப்போஜனம் எடுக்கக்கூடாது. 4. ஆனால் எல்லா மனிதராலும் வாசிக்கப்படக்கூடிய விதத்தில் நம்முடைய ஜீவியங்கள் இருக்கின்றன என்று நாம் நினைக்கிறபடியான காரியங்களை நாம் செய்து கொண்டிருப்போமானால், யாராவது ஒருவர் விரலை நீட்டி, ‘நான் இம்மனிதனை அன்றொரு நாள் ஒரு மதுக்கடையில் பார்த்தேன்’ என்றோ, ‘இம்மனிதன் நின்றுகொண்டு, அசுத்தமான நகைச்சுவைகளைக் கூறிக்கொண்டிருந்ததை நான் நான் கேட்டேன்’ என்றோ, ‘இந்த ஸ்திரீ தவறான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறாள்’ என்றோ கூற முடியாமல் இருக்குமானால். (ஆனால் நீங்கள் தவறான காரியங்களைச் செய்து) பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் சுட்டிக்காட்டுவதை நீங்கள் அறிவீர்களானால், அப்பொழுது - அப்பொழுது நீங்கள் இராப்போஜனம் எடுக்கக்கூடாது. ஆனால் நீங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கும் ஜீவியத்தை நீங்கள் திரும்பிப் பார்த்து, உங்களுடைய எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு, இரத்தத்தின் கீழாக உள்ளது என்பதைக் கண்டு, அவ்வாறு நீங்கள் - நீங்கள் உணருவீர்களானால், அப்பொழுது நீங்கள் - நீங்கள் இராப்போஜனம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் - நீங்கள் - நீங்கள் அதனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள். 5. இப்பொழுது, இங்கே பரிசுத்த யோவான் புத்தகத்தில் இருந்து, பரிசுத்த பவுல் நமக்கு உபதேசிக்கும் படியாகவுள்ள இந்த வேதவாக்கியத்தை நாம் வாசிப்போமாக... உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன், அது 1 கொரிந்தியர் 11-ம் அதிகாரம் 23ம் வசனம் தொடங்கி இருக்கிறது. நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, எனக்குப் பேச சிறிது நேரம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேனர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். 6. நான் ஒரு முக்கிய விஷயத்தைக் கூறுவேனாக: நாம் கிறிஸ்துவாகிய வார்த்தையின் மூலமாக நியாயந்தீர்க்கப்படும்போது, நாம் சிட்சிக்கப்படுகிறோம். நாம் தவறு செய்து, இந்த வார்த்தையின்படி ஜீவிக்கவில்லை என்றால், நாம் கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். கர்த்தர் நம்மை சிட்சிக்கும்போது, அது நம்மைத் திருத்துவதைக் குறிக்கிறது, அப்போது நாம் உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருக்கிறோம். நாம் உலகத்தாரல்ல. நாம் உலகத்திலிருந்து வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கிறோம், ஒரு வித்தியாசமான ஜீவியத்தை, ஒரு வேறுபிரிக்கப்பட்ட ஜீவியத்தை ஜீவிக்கிறோம். நாம் ஒருபோதும் உலகத்தின் ஜீவியத்தை ஜீவிக்காமல், ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறோம். நாம் ஒரு - ஒரு நல்ல ஜீவியத்தை, ஒரு வித்தியாசமான ஜீவியத்தை ஜீவிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அப்படிப்பட்ட சமூக அந்தஸ்தை நான் குறிப்பிடவில்லை, ஆனால் உண்மையான பரிசுத்த ஜீவியத்தை நாம் ஜீவிப்பதையே நான் குறிப்பிடுகிறேன், ஆவியின் கனிகள் நம்மிடத்தில் நிச்சயமாக காணப்பட வேண்டும்: சாந்தம், தயவு, பொறுமை, நீடிய பொறுமை, விசுவாசம் போன்ற ஆவியின் கனிகள் நம்மில் காணப்பட வேண்டும். ஆனால் நாம் இக்காரியங்களைக் கேள்விப்படும் போது, நாம் அவைகளைச் செய்யக் கூடாது என்றும், நாம் அவ்வாறு செய்தால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவோம் என்றும், நாம் கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம் என்பதையும் நாம் அறிந்து கொள்ளுகிறோம். நாம் நமக்குள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருந்தால், தேவனுடைய கிருபையால் நாம் அக்காரியங்களுக்கு மேலாக ஜீவிக்கிறோம். அப்படியானால் நாம் உலகத்தோடு ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை, ஆனால் உலக காரியங்களுக்கு மேலாக நாம் ஜீவிக்கிறோம். புரிகிறதா? ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம் பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன். 7. நாம் கூடி வரும்போது, இதன் பேரிலான மகத்தான புத்திமதிகளை எப்போதுமே கூறுவதுண்டு, நாம் அப்படிப்பட்ட எதையுமே காணக்கூடாமல் இருந்தாலும், வேறு ஏதோவொருவரிடத்தில் நாம் காண்கிற சரியல்லாத ஏதோவொரு காரியம் அங்கே இருக்கலாம். இந்த இராப்போஜனத்தைப் புசிக்க நீங்கள் கூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருந்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். ஜெபம் பண்ணுங்கள்... நாம் எப்போதுமே இதைக் குறித்துக் கூறுகிறோம்: நீ – நீ உன்னிடத்தில் ஏதோவொரு பாவம் இருக்குமானால், நீ ஒரு விசுவாசியாக இருந்து கொண்டே ஏதோவொரு அநீதியான செயலையோ அல்லது ஏதோவொரு காரியத்தையோ செய்திருப்பாயானால், நான் உனக்காக ஜெபிப்பேன், தேவன் அதை உன்னை விட்டு எடுத்துப்போடும்படியாகவும், அதற்காக உன்னை அவர் மன்னிக்கும்படியாகவும் நான் – நான் ஜெபிப்பேன். நான் அறிந்திராமல் செய்திருக்கிற ஏதோவொரு – ஏதோவொரு காரியம் அங்கேயிருக்குமானால், நீ எனக்காக ஜெபி... நான் அதைச் செய்து, அது தவறென்று அறிந்தால், நான் – நான் சரியாக இப்பொழுதே அதை அறிக்கை செய்வேன். நான் அதை அறிக்கை செய்ய ஆயத்தமாயிருக்கிறேன், ஏனெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். 8. நீங்கள் கர்த்தருடைய சரீரமாய் இருக்கிறீர்கள் என்பதை நிதானித்து அறிதல், துன்மார்க்கத்திலும் பாவத்திலும் இருந்து கொண்டு, உங்களால் அதை நிதானித்து அறிய முடியாது; நாம் அதற்கும் மேலாக வந்தாக வேண்டும். கர்த்தர் நீதிபரர் என்று நாம் நிதானித்து அறிந்து, அவர் நம்முடைய கிருபாதார பலியாயிருக்கிறார் என்று நாம் நிதானித்து அறிகிறோம்; நாம் அறிக்கை செய்துள்ள நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும், நம்முடைய எல்லா அக்கிரமங்களிலிருந்தும் நம்மை சுத்திகரிப்பதற்கு அவருடைய பரிகாரத்தின் மேல் நாம் காத்திருந்து, அவரிடத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறோம்; அப்போது கர்த்தருடைய சரீரம் இன்னதென்றும், அது எதற்காக இருக்கிறது என்றும் நாம் நிதானித்து அறிகிறோம். அப்போது கர்த்தருடைய மணவாட்டி சரீரமாக அது நம் மத்தியில் இருப்பதை மீண்டுமாக நிதானித்து அறிகிறோம், சுவிசேஷம் வளரவோ அல்லது தேவனுக்கு முன்பாக நம்மை ஒரு கற்புள்ள கன்னிகையாக கொடுப்பதற்கு தடையாயிருக்கிற ஏதோவொரு தவறு இங்கே நம்மிடத்தில் இருக்குமானால், நாம் அதை நிதானித்து அறிவோம்; அது தவறு தானா என்று சரியாக இப்பொழுதே கண்டுகொள்ளும்படியாக நாம் நிதானித்து அறிவோம். அது தவறாக இருக்குமானால், அதை அறிக்கை செய்வோம். ‘கர்த்தாவே, அதைக் குறித்து நான் – நான் வருந்துகிறேன்’ என்று கூறுவோம். 9. ஆகையால், அது நிச்சயமாக நாம் செய்திருக்கிற, நீங்கள் செய்திருக்கிற ஏதோவொன்றாக இருக்கலாம், நான் செய்திருக்கிற ஏதோவொன்றாக இருக்கலாம். அது நிச்சயமாக உணர்வோடு இருந்தாக வேண்டும், சரியாக இப்பொழுதே, தேவன் அதற்காக நம்மை மன்னிக்கும்படி கேட்போமாக. நாம் வழக்கமாக இங்கே ஒரு பாடலைப் பாடுவதுண்டு: ‘நான் உம்மிடம் அறிக்கையிட்டிருக்கிற பாவங்களை மன்னியும்’ என்ற பாடல், இரகசியமான பாவங்களை மன்னியும், உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அதைக் குறித்து எதையுமே அறிந்திருக்கக்கூட மாட்டீர்கள், அறியப்படாத ஒரு பாவம். தேவனே அவைகளை மன்னியும் என்று நாம் – நாம் – நாம் ஜெபிப்போம். இப்பொழுது, அது, ‘நீங்கள் கூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள் (tarry)’ என்று கூறுகிறது, அது உண்மையாகவே இவ்விதமாக ஒருவருக்காக ஒருவர் காலதாமதம் செய்யுங்கள் என்று கூறுகிறது. ‘காலதாமதம் செய்தல் (tarry)’ என்பதற்கு ‘காத்திருத்தல்’ என்று அர்த்தம், ஒருவருக்காக ஒருவர் காத்திருத்தல். நாம் இப்பொழுது அதை செய்வோம். நான் உங்களுக்காக ஜெபிப்பேன். நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்று நீங்கள் எதையாவது அறிந்திருந்தால், ‘தேவனே, என்னை மன்னியும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை. இந்த இரவிலிருந்து நீர் எனக்கு உதவி செய்வீரென்றால், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன். கர்த்தாவே, நான் – நான் அதையே பொருட்படுத்திக் கூறுகிறேன், நீர் என்னை மன்னிப்பீரென்றால், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன். ‘நீர் என்னை மன்னித்திருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன்’ என்ற அறிக்கையின் பேரில், நான் கிறிஸ்துவின் சரீரத்தை புசிக்கப் போகிறேன், என்னுடைய சகல பாவங்களுக்காகவும் நீர் என்னை மன்னித்து விட்டீர் என்று என் இருதயத்தில் உணருகிறேன்’ என்று கூறுங்கள். பிறகு உங்களுடைய இரகசிய பாவத்துக்காக ஜெபம் பண்ணுங்கள்; எனக்காக ஜெபம் பண்ணுங்கள், அது ஒருக்கால் நாம் அறிந்திராத எதுவாகவும் இருக்கலாம், (அப்போது) உலகத்தோடு ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும்படிக்கு நாம் ஒன்றாகக் கூடி வர மாட்டோம். 10. நாம் இங்கே உள்ளே உலகம் இருப்பதை விரும்பவில்லை. இங்கே ஆராதிக்கும்படிக்கு தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற ஜனங்களைக் கொண்ட இந்த இடத்தில், நாம் சுயநலத்திலிருந்து நம்மை நாமே சுத்தமாகக் காத்துக் கொள்ள விரும்புகிறோம்; நம்முடைய காரியங்களை பாவத்திலிருந்தும், நம்முடைய ஜீவியங்களை உலகத்தின் சகல காரியங்களிலிருந்தும் சுத்தமாகக் காத்துக் கொள்வோம், நாம் அதனால் கறைபட்டு விடக்கூடாது. நாம் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாயிருக்க வாஞ்சிக்கிறோம். எனவே இப்பொழுது, சிறிது நேரம் ஒருவர் மற்றவருக்காக அமைதியாக ஜெபிப்போமாக. நான் உங்களுக்காக ஜெபிக்கையில் நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் ஜெபிப்பதைத் தொடர்ந்து 31 வினாடிகள் அமைதி நிலவுகிறது – ஆசிரியர்.) கர்த்தராகிய இயேசுவே, கர்த்தாவே, இப்பொழுது எங்களுடைய சகல பாவங்களும் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினுள் இருப்பதாக. அவை தேவனுடைய ஞாபகத்திலிருந்து மறக்கப்பட்டு போவதாக, நாங்கள் இப்பொழுது அன்பிற்குரிய விசுவாசிகளாகவும், கிறிஸ்துவில் குழந்தைகளாகவும் கூடி வருவோமாக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 11. இப்பொழுது, இச்சமயத்தில், மூப்பர்கள் முன்னே வருகிறார்கள் என்று நினைக்கிறேன். அது இங்கே இன்னுமாக நடைமுறையாக இருக்கிறதா? சகோதரன் டோனி சேபல் அதை நடத்துவார். இப்பொழுது யாராவது போக வேண்டியிருந்து, இராப்போஜனத்திற்காக தங்கியிருக்க விரும்பவில்லை என்றால், நாங்கள் இன்றிரவு உங்களை உள்ளே கொண்டிருப்பதில் (நீங்கள் வெளியே போவதில்) மகிழ்ச்சியாயிருக்கிறோம். புதன்கிழமை இருக்கிற கூடுகையை - புதன் கிழமை இரவு ஜெபக் கூட்டத்தை நினைவுகூருங்கள். மற்றவர்கள் பீடத்தண்டை வரும் வேளையில், நீங்கள் அமைதியாக வெளியேறி விடுங்கள். நாம் இராப்போஜனத்திற்காக ஆயத்தமாகும் வேளையில், இங்கிருக்கும் சகோதரன் சேபல் ஜனங்களை பீடத்தண்டை நடத்துவார். (அங்கே வேறொரு அமைதியான வேளை காணப்படுகிறது – ஆசிரியர்.) 12. அப்பமானது கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. சற்று முன்பு பாடின, ‘என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது’ என்ற பாடலைப்போன்று. கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற மூன்று ஒழுங்குகள் மாத்திரமே உண்டு, அவைகள் எவையெனில், ஞானஸ்நானம், அப்பம் புசித்து திராட்சை ரசம் (wine) பானம் பண்ணுதல், மற்றும் கால் கழுவுதல் ஆகியவைகளாகும்; அவைகள் தான் ஒழுங்குகள் ஆகும். இது உடைக்கப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இன்றிரவு இதில் பங்கு கொள்ளுகிற ஒவ்வொரு நபரும் தங்கள் மேல் வருகிற பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. வியாதியஸ்தர்களாயிருப்பவர்களை, கசப்பான கீரைகளையும், திராட்சை ரசத்தையும் புசித்ததன் மூலமாக எகிப்தில் முதலில் இதைத் துவங்கின பரலோகத்தின் தேவன் தாமே... தேவன் உங்களை சுகப்படுத்தி, உங்களுடைய முழு பிரயாணத்திலும் உங்கள் மத்தியில் வியாதியே இல்லாதவாறு செய்வார் என்று நம்புகிறேன். நாம் இதை அவருக்கு விரும்பிக் கொடுக்கும்போது, பரலோகத்தின் தேவன் தாமே இப்பொழுது நம்மேல் நோக்கமாயிருப்பாராக. 13. கர்த்தராகிய தேவனே, வானங்களையும் பூமியையும் உண்டாக்கினவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல ஈவையும் அருளுபவரே, இந்த ஒழுங்குக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், நாங்கள் ஐக்கியத்தைக் கொண்டவர்களாய், தேவனுடைய கிருபையின் இராப்போஜனத்தைச் சுற்றிலும் உம்முடைய பிரசன்னத்தில் இருந்து, அது அக்காலத்தில் இருந்தது போன்றே உம்மைக் குறித்து நினைவுகூரும்படியாக எங்களால் இதைச் செய்ய முடிகிறது. நாங்கள் எங்கள் சொந்த இருதயங்களில் சிந்தித்துப் பார்க்கும் போது, ஒரு நாள் நாங்கள் தகுதியற்றவர்களாய் இருந்தோம், இப்பொழுதோ இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது அந்த பாவத்திலிருந்து எங்களைச் சுத்திகரித்து, நாங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்றாக நிற்கிறோம். பிதாவே, இந்த கோஷர் அப்பமானது சுடப்பட்டு, இந்த நோக்கத்துக்காகவே இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது, கர்த்தாவே, பிட்கப்பட்ட சரீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற அதை நீர் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்... (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்.) இச்சரீரமானது பிட்கப்பட்டபோது, அவர் கல்வாரியில் புனிதத்தன்மையுள்ள அச்சரீரத்தில் வேதனையையும் பாடுகளையும் அனுபவித்தார். எங்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, எங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம். அதன் காரணமாகத்தான் இந்த பிட்கப்பட்ட அப்பத்தை இன்றிரவு நாங்கள் புசிக்கிறோம். தேவனே விசுவாசிப்பவர்களை ஆசீர்வதித்து, இயேசு கிறிஸ்துவின் சரீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்த – இந்த கோஷர் அப்பத்தை பரிசுத்தப்படுத்தும். ஆமென். 14. ‘போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து, அவர் எடுத்து, வாங்கி புசியுங்கள்; இந்தப் பாத்திரம் புது உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம், கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்’ என்று வேதம் கூறுகிறது. இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படிக்கு இங்கே ஒருமிக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் திராட்சைப் பழத்தின் ஜீவனிலிருந்து செய்யப்பட்ட இந்தத் திராட்சை ரசத்தை என்னுடைய கரத்தில் பிடித்திருக்கும் நேரத்தில். நான் அங்கே நோக்கிப்பார்த்து என் பாவமானது போனதைக் காணாமல், நான் இராப்போஜன தட்டிலிருந்து எடுக்கும்படியான ஒரு நேரம் ஒருபோதுமே இருக்காது. அது எவ்வாறு – எவ்வாறு இருந்து வந்துள்ளது என்பதை நான் காண்பேனானால், நல்லது, நாம் எங்கேயிருப்போம்? ஒரு வியாதிப்பட்ட மனிதன் படுத்த படுக்கையாயிருந்து அங்கே அந்த மருத்துவமனையில் மரித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கிறேன்: அது நானாகவும் இருக்கலாம். அப்போது அவருடைய தழும்புகளால் நான் குணமானேன் என்பதன் மூலமாக அது இருக்கும். இந்த திராட்சை இரசத்தை உபயோகப்படுத்தும் நோக்கத்திற்காக பரலோகத்தின் தேவன் தாமே இந்த திராட்சை ரசத்தை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் இந்த திராட்சை ரசத்தை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற திராட்சைகளின் இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த திராட்சை ரசத்தை உம்மிடம் கொடுக்கிறோம். பிதாவே, நாங்கள் அதைப் பெற்றுக் கொள்ளும்போது, வியாதி எங்களை விட்டு நீங்கிப் போவதாக. பாவ ஆசை எங்களை விட்டு எடுக்கப்பட்டு போவதாக. இதற்குப் பிறகு, நாங்கள் அவ்வளவு பரிசுத்தமான, அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியம் செய்வோமாக, அந்த மனிதர்கள் இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பை எங்களுக்குள் காண்பார்களாக. எங்களுடைய – எங்களுடைய ஜீவிய நடை நாங்கள் விசுவாசிக்கிற சுவிசேஷத்திற்கு தகுதியானதாய் இருப்பதாக. இதை அருளும், பிதாவே. இப்பொழுது இந்த திராட்சை ரசத்தை உபயோகப்படுத்தும் நோக்கத்துக்காக இதை பரிசுத்தப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.